2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'எல்லாம் எங்கும் சமம்'

Thipaan   / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிற்றுறைப் பிரச்சினைகளைத் தீர்த்தல், தொழிற்றுறை உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் வரி செலுத்தும் மக்களுக்கு உயரிய சேவையொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில், தனது பேஸ்புக் கணக்கில், செய்திக் குறிப்பொன்றைப் பதிவேற்றம் செய்துள்ள அவர், மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவதே, அரசாங்கத்தின் முதற்கட்ட கடமையும் பொறுப்புமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'எந்தவொரு நபரும், மற்றுமொரு நபரை விட வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வதில்லை. அதேபோன்று, எந்தவொரு தொழிற்றுறையும், ஏனைய தொழிற்றுறைகளை விட விசேட வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு இந்த அரசாங்கம் கருதுவதும் இல்லை' எனவும், அவர் அந்த செய்திக் குறிப்பில், மேலும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .