Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 21 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பதுளை, கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் மண்சரிவு அபாயம் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 73 குடும்பங்களைச்சேர்ந்த 390 பேரும் அம்பிட்டிகந்த தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீரியாபெத்தையில், கடந்த 19ஆம் திகதியன்று 100 மில்லிமீற்றர் மழை பெய்தமையால், மேற்படி 73 குடும்பங்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பில் அரசாங்க செயலாளர் சிரோமி ஜீவமாலா தெரிவிக்கையில், மேற்படி 73 குடும்பங்களை சேர்ந்தவர்களும் அம்பிட்டிகந்த தொழிற்சாலையில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அங்கு இடவசதி போதாமையினால் மாற்று இடமென்றுக்கு அம்மக்களை குடியமர்த்துவதற்க்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான உலருணவு மற்றும் அடிப்படை உதவிகளையும் வழங்குவதற்கு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இதேவேளை, 'தியகல தோட்டத்திலும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதனால் அங்கிருந்து சுமார் 60 குடும்பங்களை கொண்ட 300 பேர் பொது இடமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலருணவு பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன'என்றார்.
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago