2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

குற்றம் நிரூபிக்கப்படின் வேலையிலிருந்து நீக்கப்படுவார் யோஷித

Kanagaraj   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படின், அவர் வேலைநீக்கம் செய்யப்படுவாரென கடற்படை நேற்று கூறியது.

அனுமதியின்றி வெளிநாடு சென்றமை, கடற்படை அதிகாரியாக இருந்தபோதிலும் அரசியலில் ஈடுபட்டமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக, அவருக்கு எதிராக விசாரணைகள் நடப்பதாக கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி கூறினார்.

இந்த இரண்டு குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடந்து கொண்டிருக்கையில், பணச்சலவைக் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 'பணச்சலவைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் கடற்படையிலிருந்து விலக்கப்படுவார்' என அவர் கூறினார்.

இவருக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில் கிடைத்தது பற்றியும், இவர் எவ்வாறு கடற்படையில் இணைந்தார்  என்பதையும் விசாரிக்க வேணடுமென, பாதுகாப்பு செயலாளர், கடற்படைத் தளபதிக்குப் பணித்துள்ளார்.

யோஷித, 2006இல் பயிற்சி அதிகாரியாகக் கடற்படையில் சேர்ந்தார். கடற்படை மற்றும் கடல் அக்கடமியில் அடிப்படைப் பயிற்சியை பூர்த்திசெய்த இவர், நடுத்தர கடற்படை அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதியான தனது தந்தையின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

2009இல் கடற்படையில் நிறைவேற்றுத்தர பிரிவில், பதில் உதவி லெப்டினனாக பதவி உயர்த்தப்பட்டார். கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்;க் நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பில் யோஷிதவை, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு, கடந்த ஜனவரி 30ஆம் திகதியன்று, கடற்படைத் தலைமையகத்தில் விசாரித்தது. யோஷிதவுடன் 4 பேர், எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X