2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'கிழக்கு முதலமைச்சர் விவகாரம்: அறிக்கைகளையிட பிரதமர் பணிப்பு

Kogilavani   / 2016 மே 27 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சம்பூர் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில், சிரேஷ்ட கடற்படை அதிகாரியொருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வசைபாடிய சம்பவம் தொடர்பில், முதலமைச்சரையும் கடற்படையையும் அறிக்கை கோரியுள்ளார்.

ஜி-7 மாநாட்டுக்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர் அறிக்கைகளை ஜனாதிபதியிடம் பிரதமர் கையளிப்பார் என பிரதமர் அலுவல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தவிர, ஜனாதிபதி நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் வரையில் கடற்படையையும் முதலமைச்சரையும் ஊடகங்களுக்கு அறிக்கை அளிப்பதை நிறுத்துமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .