2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'சமுர்த்தி'யாக மாறுகிறது 'திவிநெகும'

George   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

'திவிநெகும' திட்டத்தை மீண்டும் 'சமூர்த்தி' எனும் பதத்தை உபயோகித்து அழைப்பது குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது, ஊடகத்தறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதனைத் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க திவிநெகும சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை அங்கிகாரத்துக்காக நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்குமான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .