2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

14 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 ஏப்ரல் 05 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாருவ பிரதேசத்தில், மிகப்பெரியளவில் சட்டவிரோதமாக துப்பாக்கி உற்பத்தி செய்யப்பட்டு வந்த கைத்தொழிற்சாலை, நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அங்கு, 14 துப்பாக்கிகளுடன் சந்தேகநபரொருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கல்கடஸ் ரக துப்பாக்கி 4, ஷொட் கன் ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கிகள் 10 மற்றும் ஏனைய வகைகளை சேர்ந்த துப்பாக்கி தொகை, துப்பாக்கி தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், மீள் நிரப்பக்கூடிய போரா 12 ரக துப்பாக்கி ரவைகள் 31, ரிவோல்டர் ரக ரவைகள் 5 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தனது வீட்டுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் இந்த துப்பாக்கிகளை தயாரித்து வந்துள்ளார். விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X