2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'தமிழ்ப் பெயர்ப் பலகைகளை தகர்த்தெறிவோம்'

Gavitha   / 2015 நவம்பர் 20 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

யாழ்ப்பாணத்தில் நாகதீபு என்ற பெயரை, நயினாதீவு என்று பெயர்மாற்றம் செய்தால், கண்ணில் தென்படுகின்ற அனைத்து தமிழ் வீதிகளின் பெயர்ப் பலகைகளையும் இலங்கையில் எப்பகுதியில் இருந்தாலும் சரி, தகர்த்தெறிவோம் என்று ராவணபலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

பௌத்தர்களின் புனித தீவான யாழ்ப்பாணம், நாகதீப என்ற பெயரை நயீனாதீவு என்று பெயர் மாற்றம் செய்ய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சித்து வருகிறார்.

விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் மீண்டும் கைது செய்யுமாறு ராவணபலய அமைப்பு கொழும்பில் நேற்று வியாழக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாடப்மொன்றை நடத்தியது.

ஆர்ப்பாட்டம் நிறைவில் ஜனாதிபதிக்கு மகஜரொன்றை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தாம் சிறை செல்லக் காரணமானவர்களை கொலை செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

 குறிப்பாக, 'யுத்தத்தை முன்னின்று வழிநடத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆயகியோரின்; உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது' என்றார்.

மேலும், விடுதலை செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கே.பி மற்றும் கருணா அம்மான் ஆகியோரை உடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X