2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'நான் போவேன்'

Gavitha   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-05, கிருலப்பனையில், கூட்டு எதிரணி நடாத்தவிருக்கும் மேதினக் கூட்டத்தில் நான் பங்கேற்பேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி கடமைகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மே தினம் என்பது தொழிலாளர் தினமாகும். அது சிறந்த தினமாகும். கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காகவே அரசாங்கமும் மேதினத்தை அனுஷ்டிக்கின்றது. மே தினத்தை, கட்சி பேதங்களின்றி அனுஷ்டிக்க வேண்டும். மே தினத்தன்று நானும், சிவப்பு நிறத்திலான ஆடையை அணிந்திருந்தேன். இம்முறை மேதினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டு எதிரணியிடமிருந்து அழைப்பு கிடைத்துள்ளது. நான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .