2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

12 பேரை கொன்ற காட்டு யானை சிக்கியது

George   / 2016 ஜூன் 07 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 நபர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த காட்டு யானையை, வெல்லவாய பலஹருவ தேவகிரிகந்த பிரதேசத்தில் வைத்து வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

அம்பேகமுவ, பலஹருவ, உணகந்த, வெஹேரயாய, எதிலிவௌ, சிறிபுர ஆகிய பிரதேசங்களில் மனிதர்களின் உயிரை பறித்து, சொத்துகளுக்கு சேதம் விளைவித்து வந்த இந்த காட்டுயானை, மிக சிரமத்துக்கு மத்தியில் பிடிக்கப்பட்டுள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சின் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பிடிக்கப்பட்ட காட்டு யானை, ஹொரவபத்தான யானைகள் தடுப்பு மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .