Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 24 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 'டாடா சிட்டி ரைடர்' வகையைச் சேர்ந்த 40 பஸ்கள், மிகவும் இரகசியமான முறையில் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் உப-தலைவர்களில் ஒருவரான போ.சிவராஜா, கீழ்க்கண்டவாறு விளக்கமளித்தார்.
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 5 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் நிதியுதவியின் கீழ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் 40 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
அந்த பஸ்களில் 20 பஸ்கள் பழுதடைந்துள்ளன. சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளது. 'நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய பிரதேசங்களிலே இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. குறித்த பகுதிகளில் பாதைகள் சீரின்மையால் பஸ்கள் விரைவில் பழுதடைந்து விட்டன.
இந்நிலையில், குறித்த பஸ்களின் சாரதிகள் சிலர் குத்தகை அடிப்படையில் பஸ்களை பெற்று, அவற்றை பழுதுபார்த்து தற்போது சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் சில பஸ்கள் பழுதடைந்துவிட்டன.
இதனால், நடத்துனர், சாரதிகளுக்கு சம்பளம் வழங்குவதில், காப்புறுதி செலுத்துவதில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டோம். அவை நிறைவுபெற்றவுடன், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றையும் பழுதுபார்ப்பதற்கான உதவியை பெற்று மீண்டும் அவற்றை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .