Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சனத் கமகே
ஹம்பாந்தோட்டையில் இன்று திங்கட்கிழமை காலை நிலவிய பதற்றத்தின்போது, பஸ்ஸொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் 06 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை -திஸ்ஸமஹரகம வீதியில் பண்டாகிரியச் சந்தியில், குடிநீர் விநியோக வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரி பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர்ப் பற்றாக்குறை காரணமாக தாங்கள் எதிர்நோக்கும் கஷ்டத்தை அதிகாரிகள் அலட்சியம் செய்வதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.
இவ்வாறு வீதியில் தடையை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கலைக்க முயன்றனர். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவ்வழியில்ச் சென்ற பஸ் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஹம்பாந்தோட்டைப்பகுதி தலைமையக பொலிஸ் அதிகாரி மற்றும் 03 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
18 May 2025
18 May 2025