2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'மஹிந்தவோடு இனி இணையோம்'

Gavitha   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழான ஸ்ரீ லங்கா சுதந்;திரக் கட்சி பிளவுபடாது என்பது 90 சதவீதமான உண்மையாகும்' என்று தெரிவித்த அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சரான லக்ஷ்மன் செனவிரத்ன, அந்த உண்மையை உறுதிப்படுத்தும் வகையில், கூட்டு எதிரணியைச் சேர்ந்த இன்னும் பலர், அரசாங்கத்துடன் வெகுவிரைவில் இணைந்துகொள்வர் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

 'நாட்டில் தற்போது இரண்டு விதமான சூழ்நிலைகள் காணப்படுகின்றன. அதில் முதலாவது, யுத்தம் காரணமாக எம்முடன் பகைமையை வளர்த்துக்கொண்ட சர்வதேசம் இன்று தமது பகைமையை மறந்து, நட்புறவை வளர்த்துக்கொண்டுள்ளது. இது எமக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

இரண்டாவது, மே தின கூட்டம், ஸ்ரீ லங்கா சுதந்;திரக் கட்சியை பொறுத்தமட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழேயே செயற்படுகிறது. அதனடிப்படையில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தலைமையின் கீழேயே செயற்பட வேண்டும். அதனைவிடுத்து கட்சியைவிட்டு பிரிந்து தனியே குழுக்களை அமைத்து மே தினத்தை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.

'எமது கட்சி தலைமையை புறக்கணித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்தும் எந்தக் கூட்டத்துக்கும் நாம் செல்ல மாட்டோம்' என்றும் அவர் சொன்னார்.

'கட்சிக்குள், சிற்சில பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். அதற்காக கட்சியை இரண்டாகத் துண்டாட நினைப்பது தவறு' என்றார். நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்ப்போமே ஒழிய, மஹிந்தவோடு இணையமாட்டோம்'  என்றும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .