2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'மஹிந்தவை மந்திரிதுமா என்றா அழைப்பது'

Gavitha   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அவரை எவ்வாறு அழைப்பது என்பது பற்றி உறுதியற்ற தன்மை நிலவுவதாக, ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

அதிகாரங்களை தன்வசப்படுத்திக் கொள்ள நினைத்ததாலேயே மஹிந்த ராஜபக்ஷ அவருடைய நற்பெயரை இழந்தார். இதுவே இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடாமல் இருந்திருந்தால், நாம் அவரை முன்னாள் ஜனாதிபதி என்று அழைத்திருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது அவரை, நாடாளுமன்ற உறுப்பினர் (மந்திரிதுமா) அல்லது முன்னாள் ஜனாதிபதி என்ற இரண்டை கொண்டு எவ்வாறு அழைப்பது என்று கூட தெரியாத சங்கட நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ள அவர், எம்மைப்போன்ற ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருப்பதால், அவருடன் இருக்கின்ற சக நாடாளுமன்ற உறுப்பினர்ளும் அவரை 'மந்திரிதுமா' என்றே அழைக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X