Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 27 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
800 தமிழாசிரியர்கள், 300 சிங்கள மொழி ஆசிரியர்கள், 100 ஆங்கில மொழி ஆசிரியர்கள் என மொத்தமாக, ஆயிரத்து 300 மொழியாசிரியர்கள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சில் உள்வாங்கப்பட்டு பயிற்றுவிக்கப்படவுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழாசிரியர்கள் சிங்கள கல்வி கூடங்களில் தமிழ் மொழியையும், சிங்கள ஆசிரியர்கள் தமிழ் கல்வி கூடங்களில் சிங்கள மொழியையும், ஆங்கில ஆசிரியர்கள் அவசியமான கல்வி கூடங்களில் ஆங்கில மொழியையும் போதிக்கும் தொழில் வாய்ப்புகளை பெறுவார்கள் எனவும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாறு பயிற்றுவிக்கப்படவுள்ளவர்களுக்கு அரச பணியாளர்களுக்கு மொழி கல்வியை போதிக்கும் சந்தர்ப்பங்களும் இவர்களுக்கு கிடைக்கும். இது இவர்களுக்கு நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பாக பங்களிக்க வாய்ப்புகளாகவும், தொழில் வாய்ப்புகளாகவும் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொழில் வாய்ப்புகளுக்கான தகைமைகள்:
மேலதிக தகைமை:
க.பொ.த. (சா/த) பரீட்சையில் தமிழ் இலக்கியத்தில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் மேலதிக தகைமையாகும்.
குறிப்புகள்:
மேற்படி தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரிகள், கீழ்வரும் மாதிரி விண்ணப்பப்படிவத்தை தாயரித்து பூர்த்தி செய்து (கல்வி மற்றும் ஏனைய மொழித் தகைமைகளுடனான சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுடன்) 31.05.2019 திகதிக்கு முன்னதாக கீழ்வரும் விலாசத்துக்கு முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “ மொழி ஆசிரியர் - பயிற்சி - தமிழ் – 2019 ” மற்றும் வதிவிட மாவட்டத்தை குறிப்பிட்டு அனுப்பப்படல் வேண்டும்.
முகவரி
பணிப்பாளர் நாயகம், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சு, இல.321/1, ஹைலெவல் வீதி,மாகும்புர, பன்னிபிட்டிய.
தொலைபேசி இல: 0113-092903, 0770333479, 0752840561, 0757422485.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago