2025 ஜூலை 12, சனிக்கிழமை

1 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்னுடன் நபர் கைது

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

1 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்னுடன் சந்தேகநபரொருவர் பாணந்துறை- வலான குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அங்குலான பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை (7) 32 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 75 கிராம் 130 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் சந்தேகநபரிடம் இருந்த  4  அதிசொகுசு கார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் இன்றைய தினம் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .