2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

10 வரை கால அவகாசம்

Mayu   / 2024 மே 16 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரக் கட்டணக் குறைப்பு சதவீதம் எதிர்வரும் ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான முன்மொழிவுகள் கிடைத்தவுடன் மின்கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கை தொடங்கப்படும்.

இதேவேளை, மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை சமர்ப்பிக்க வௌ்ளிக்கிழமை (17) வரை கால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முன்மொழிவுகள் ஆணைக்குழுவிடம் மே 1ஆம் திகதி வழங்கப்படவிருந்த நிலையில், மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு எதிர்வரும் 10ஆம் திகதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான முன்மொழிவுகளை கடந்த 10ஆம் திகதி இலங்கை மின்சார சபை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பில் மின்சார சபைக்கு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .