Editorial / 2023 ஏப்ரல் 07 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 12 இந்திய மீனவர்களில் 11 மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வியாழக்கிழமை (06) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனை உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு படகும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
இந்த 12 நபர்களில் ஒரு சந்தேக நபருக்கு இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டிருந்த முன் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முன் குற்றச்சாட்டின் கீழ் ஒருவருக்கு நேரடி சிறைத்தண்டனை வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
2 minute ago
44 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
44 minute ago
44 minute ago
2 hours ago