2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

11 டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் மீட்பு

Editorial   / 2025 ஜனவரி 08 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள்  உயிரிழந்த நிலையில்   செவ்வாய்க்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளன.

 முள்ளிக்குளம்  தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர். இதன் போது டொல்பின்கள்   இறந்து கிடந்ததை அவதானித்துள்ளனர்.

பின்னர் இறந்த டொல்பின்களை மீட்டு   பரிசோதித்ததன் பின்னர் இது தொடர்பான தகவல்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றில்  செவ்வாய்க்கிழமை (07)   சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகள்  உயிரிழந்த டொல்பின்களின் மரணம் தொடர்பான  பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர்.

இதன் போது வலையில் சிக்கியதால் அவை  இறந்ததாக மருத்துவர்கள் ஊகிக்கின்றனர்.

மேலும் அவற்றின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக டொல்பின்களில் இருந்து   எடுக்கப்பட்ட மாதிரிகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X