2024 மே 20, திங்கட்கிழமை

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்

Freelancer   / 2024 மே 09 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான சுமார் 120 மில்லியன் ரூபாய்  பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சொத்துக்கள் எவ்வாறு ஈட்டப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியிடப்படாமை காரணத்தினால், காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவரின் சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இதில், காலி தடல்ல பிரதேசத்தில் நான்கு மாடி கட்டிடமும் அக்மீமன பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் தேயிலை மற்றும் மிளகு காணியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சொத்துக்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X