Freelancer / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
12 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு சிக்கல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
பல்வேறு சிக்கல்கள் மற்றும் அறிவாற்றல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியே போடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் உள்ள சிறுவர்களுக்கு வழங்குவதற்காக 4 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசி ஒக்டோபரில் நாட்டுக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago