2025 ஜூலை 14, திங்கட்கிழமை

130 பேர் இன்று வீடு திரும்பல்

Editorial   / 2020 மார்ச் 30 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

14 நாட்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட வர்களுள் 130 பேர் இன்று (30) தமது வீடுகளுக்கு செல்லவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மத்திய நிலையத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இதுவரையில் 1665 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பை பூர்த்தி செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என அவர் கூறினார்.

தற்பொழுது 2096 பேர் இந்த நிலையங்களில் இருந்து வருகின்றனர். இவர்களில் 130 பேர் இன்று (30) வீடு திரும்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .