2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

14 கோடி ரூபாய் மோசடி: ஜோடி கைது

Editorial   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பெறப்பட்ட பணத்தை திருப்பித் தராமல் வெற்று காசோலைகளை வழங்கி பொதுமக்களிடம் 140 மில்லியன் ரூபாயை மோசடி செய்த திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், வவுனியா பொது மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

வணிக நோக்கங்களுக்காகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்ததாக குற்றப் புலனாய்வுத் துறையின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு 2 க்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

சந்தேக நபர்கள் 47-49 வயதுக்குட்பட்டவர் மற்றும் வவுனியாவின் பண்டாரி குளத்தில் வசிப்பவர்கள் ஆவர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .