2025 ஒக்டோபர் 16, வியாழக்கிழமை

14 வயது மாணவியை கடத்திய 16 வயதானவர் கைது

Editorial   / 2025 ஒக்டோபர் 16 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நமுனுகுல கனவெரெல்ல பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை (வயது 14) கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடை உதவியாளர் (வயது 17) வியாழக்கிழமை (16) கைது செய்யப்பட்டதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர். ர்.

பண்டாரவளையில் உள்ள பட்டியகெதரவைச் சேர்ந்த சந்தேக நபர், நமுனுகுல கனவெரெல்ல தோட்டத்தில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தியதாகக் கூறப்படுகிறது. சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சந்தேக நபர் முன்பு மைனர் சிறுமியுடன் காதல் உறவில் இருந்ததாகவும்,  பொலிஸார் தெரிவித்தனர். தனது தந்தை தன்னை மிரட்டி துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி அவருக்குத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சந்தேக நபர் வேலைக்காக கொழும்பில் தங்கியிருந்த தனது தாயிடம் சென்றுள்ளார், பின்னர் சிறுமியின் தந்தை இந்த விவகாரம் குறித்து பொலிஸில் புகார் அளித்தார்.

சிறுமி, சந்தேக நபர் மற்றும் சந்தேக நபரின் தாய் பின்னர் தாமாக முன்வந்து பொலிஸில் புகார் அளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .