2025 மே 02, வெள்ளிக்கிழமை

15 வயதான சிறுமி விவகாரம்: எம்.பிக்கு வலை

Editorial   / 2021 ஜூலை 11 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தளத்தின் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக, 15 வயதான சிறுமியொருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அச்சிறு​மியை கொள்வனவு செய்து, பாலியல் தேவைக்காக பயன்படுத்திக்கொண்டார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் கைது செய்வதற்கு வலைகள் விரிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிறுமிகள் பெண்கள் உள்ளிட்ட 5,000க்கும் அதிகமானவர்களை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்வதற்கு இணையத்தளங்களின் ஊடாக, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X