2025 மே 15, வியாழக்கிழமை

1842 வீதி விபத்துகள் பதிவு

R.Tharaniya   / 2025 மே 15 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துகள்  1842 பதிவாகியுள்ள நிலையில் அந்த வீதி  விபத்துகளில் 965 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மே மாத தொடக்கத்தில் இருந்து புதன்கிழமை (14)  வரை 902 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என  பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட தவறுகளால் இவ் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், ஓட்டுநர் விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .