Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 4 இலட்சத்து 51 ஆயிரம் குடும்பங்களுக்காக, 20.3 மில்லியன் ரூபாயை வரட்சி நிவாரணமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதில் 4500 ரூபாய்க்கு நிவாரணப் பொருட்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்திலிருந்து பல சேவை கூட்டுறவு சங்கத்தின் ஊடாக இவற்றை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மூன்று பேருக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்துக்காக 4000 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதியும், மூவருக்கு அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்துக்காக 5000 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகளும் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை நுகர்வோர் மகா சங்கம் ஊடாக இந்த நிவாரப் பொருட்களை கொள்வனவு செய்ததாகவும், கூட்டுறவு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் துமிந்த தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
26 minute ago