Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
20 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள், தங்கக் கட்டிகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த 9 இலங்கையர்கள் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, நீர்கொழும்பு, சீதுவ, சிலாபம், கண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்றைய தினம் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யூ.எல். 303 மற்றும் டுபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே. 654 என்ற விமானங்கள் மூலம் இலங்கைக்கு வந்தப் போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பையிலிருந்து 2. 974 கிலோகிராம் நிறையுடைய தங்காபரணங்கள், தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
03 Jul 2025