2026 மே 06, புதன்கிழமை

200 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்த 200 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

திடீரென முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலத்தில் அதிக விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க சட்டரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழைய விலைக்கே கோதுமை மாவினை விற்பனை செய்வதற்கு மா நிறுவனங்கள் வாழ்க்கை செலவு குழுவினருக்கு இணக்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .