2025 மே 15, வியாழக்கிழமை

ரூ. 51 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சிக்கின

Kanagaraj   / 2015 ஜூன் 23 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூபாய் 51 இலட்சத்து 86ஆயிரத்து 284 பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை தன்னுடைய பயணப்பொதிக்குள் மறைத்துவைத்து சென்னைக்கு கடத்துவதற்கு முயன்ற இந்திய பிரஜையொருவரை (வயது 31) கைது செய்துள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.

அவரிடமிருந்து ஸ்ரேலிங் பவுன் 4,000 மற்றும் 28,000 யூரோ நாணயத்தாள்கள் இருந்துள்ளன. சந்தேக நபரான இந்தியப்பிரஜை, இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.127 என்ற விமானத்தில் சென்னையை நோக்கி பயணிப்பதற்காகவே வருகைதந்திருந்தார் என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .