2025 மே 15, வியாழக்கிழமை

புலம்பெயர் விழாவுக்கு நிதி வழங்கவில்லை: யூ.என்.எச்.ஆர்.சி.

Thipaan   / 2015 ஜூன் 23 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவிவகார அமைச்சினால் இவ்வருட இறுதியில் நடத்த ஒழுங்கு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் விழாவுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக வந்த செய்தியை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிராகரித்துள்ளது.

இது முழுப்பொய் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ருப்பர் கொல்வின் கூறினார்.

புலம்பெயர்ந்தோர் விழாவை நடத்த இடங்கொடுக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டித்ததுடன்  இந்த நிகழ்வுக்காக  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 3.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக தெரியவந்துள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ண சிங்க, ஞாயிற்றுக்கிழமை(21) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த விழாவுக்கு நிதி வழங்குவதன் பின்னாலுள்ள காரணம் பாரதூரமான சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை புலம் பெயர்ந்தோர் சமுதாயம், அரசாங்கத்துடன் கூடிச் செயற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பு செய்ய ஓர் உத்தியோக பூர்வ ஏற்பாட்டை உருவாக்க இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .