2025 மே 15, வியாழக்கிழமை

நாளைய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற சபாநாயகர்

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் நாளைய தினம் நடைபெறுமா என்ற சந்தேகத்துடன் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை (24) நாடாளுமன்றத்தில் கருத்தொன்றை முன்வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவினானால் முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தினேஸ் குணவர்தன, தனது கேள்வி நேரத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சில கேள்விகளை முன்வைத்தார். அக்கேள்விகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வரப்பிரசாதங்கள் சார்ந்தவையாகவே காணப்பட்டன.

இருப்பினும், இக்கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் பிரதமர் விக்கிரமசிங்க இருக்கவில்லை. இதனால், அக்கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுந்து நின்றார். இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர், 'நாளைய தினம் நாடாளுமன்றம் நடைபெறுமாயின், இக்கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிப்பார்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .