2025 மே 15, வியாழக்கிழமை

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு: டிரயல் அட்பார் முறையில் விசாரணை

Gavitha   / 2015 ஜூன் 25 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கை டிரயல் அட்பார் முறையில் விசாரணை செய்வதற்கு பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தீர்மானித்துள்ளார்.

இந்த வழக்கு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட்ட 12 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 17 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான ஸ்ரீரான் குணவர்தன, பத்மினி ரணவக்க மற்றும் சி.பி.எஸ் மொரிஸ் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையிலேயே இந்த வழக்கு ஓகஸ்ட் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

முல்லேரியா,வல்பொல பிரதேசத்தில் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .