2025 மே 15, வியாழக்கிழமை

ஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்

Kanagaraj   / 2015 ஜூன் 26 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படும் என்று மிக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 52-66 நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்யவேண்டும். ஓகஸ்ட் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 52 நாட்கள் நிறைவடைகின்றன. 

அதன்பிரகாரம் வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 6முதல்- ஜூலை 13 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும். பொதுத்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் புதிய நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு செப்டெம்பர் 1 ஆம் திகதி நடத்தப்பட்டவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .