2025 மே 15, வியாழக்கிழமை

உ/த பரீட்சையை பிற்போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது: கல்வியமைச்சு

Kanagaraj   / 2015 ஜூன் 27 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ளதால், க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இடம்பெறுவது வழக்கம். ஆனால், இவ்வருடம் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆசிரியர்கள், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்த முடிவை கல்வி அமைச்சு அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .