2025 மே 15, வியாழக்கிழமை

தப்பிய பிரதேசசபை தலைவர் 4 வருடங்களின் பின் சிக்கினார்

George   / 2015 ஜூன் 30 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மித்தெனிய பிரதேசத்தில் கஞ்சா கடத்திச்சென்ற ஆட்டோவை பொலிஸார் சோதனை செய்த போது, தப்பிச்சென்ற எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர், நான்கு வருடங்களின் பின்னர் மித்தெனிய பொலிஸாரால், நேற்று செவ்வாய்க்கிழமை(30) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06ஆம் திகதி, 12 கிலோகிராம் கஞ்சாவை விநியோகிப்பதற்காக கொண்டு செல்வதாக மித்தெனி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த ஆட்டோவை பொலிஸார் சோதனை செய்தனர்.

அதன்போது குறித்த நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச்சென்றிருந்தார். இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர், அவரை நேற்று கைது செய்த பொலிஸார் வலஸ்முல்லை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சந்தேகநபரான முன்னாள் பிரதேசசபை தலைவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உதேஷ் குணரத்ன உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .