Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 01 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விவரங்களை இலங்கை அரசு, இரண்டு மாதங்களில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன. அப்போது இலங்கை அரசாங்கம் சார்பில் அளிக்கப்படவுள்ள விளக்கங்களில், காணாமல் போனோர் தொடர்பான விபரங்களும் உள்ளடக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேரா, பீ.பீ.சி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை அரசாங்கம் நன்றாக உணர்ந்துள்ளது. அப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. இருப்பினும், இப்பிரச்சினைக்கு முடிவு காண்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த தகவல்களை உடனடியாக வெளியிட முடியாமல் உள்ளது என பிரதியமைச்சர் கூறினார்.
காணாமல்போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தோரின் உறவினர்களது எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கங்கள் நியாயமானவையே என்பதை இலங்கை அரசு முற்றாக அறிந்துள்ளது. இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் குறித்து மாறுபட்டத் தகவல்களும் உள்ளன. எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அரசு சில தகவல்களை வெளியிடும். இது தொடர்பான விபரங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும் உள்ளன.
தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 250க்கும் குறைவான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களே உள்ளனர். அந்த பட்டியல், நீதி அமைச்சிடம் உள்ளது என பிரதி வெளிவிவவகார அமைச்சர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025