2025 மே 15, வியாழக்கிழமை

காதல் ஜோடியிடம் கப்பம் பெற்ற பொலிஸார் மூவர் கைது

Kanagaraj   / 2015 ஜூலை 02 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் ஜோடியிடம் கப்பம் பெற்ற பொலிஸார் மூவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கொழும்பு, கறுவாத்தோட்டம் பாடசாலைக்கு அண்மையில் புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் பொலிஸ் சாரதி ஆகிய மூவரையே கறுவாத்தோட்ட பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

அந்த ஜோடியிடம் பொலிஸார் மூவரும் 6ஆயிரம் ரூபாவை கப்பமாக கோரியதாகவும் அந்த ஜோடியிடம் 2 ஆயிரம் ரூபாவை கப்பமாக கொடுத்துள்ளதாகவும், அந்த பொலிஸாரிடம் 5ஆயிரம் ரூபாய் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார், கடமைகளுக்கு பொலிஸார் செல்லும் போது தம்வசம் இருக்கின்ற பணத்தின் அளவு தொடர்பில் பொலிஸ் புத்தகத்தில் குறித்துகொள்ளவேண்டும். எனினும், அந்தபொலிஸார் மூவரும் தங்ளுடைய பொலிஸ் புத்தகத்தில் குறித்திகொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .