2025 மே 15, வியாழக்கிழமை

ஆடை வடிவமைப்பாளருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 ஜூலை 02 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.பாருக் தாஜூதீன்

மொடலிங் செய்த பெண்களின் நிர்வாண படங்களை வலையமைப்புகளில் தரவேற்றம் செய்தாக கூறப்படும் ஓர் ஆடை வடிவமைப்பாளரை ஜூன் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலப்பிட்டிய, இன்று வியாழக்கிழமை(02) உத்தரவிட்டார்.

சந்தேக நபரான ரொமேஸ் டி சில்வாவை குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பிரபல ஆடை விற்பனை நிலையங்களுக்கு ஆடை வடிவமைப்புகளை வழங்கும் இவர் புகைப்படங்களுக்காக மொடலிங் செய்யும் பெண்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.

இந்த பெண்களுடன் நட்புக் கொண்ட  குறித்த நபர் அவர்களை  நிர்வாணமாக படம் எடுத்ததுடன் அவர்களை தனது பம்பலப்பிட்டி ரோலண்ட ரவர்ஸ் தொடர்மாடி வீட்டில் பலாத்காரமாக அடைத்து வைத்துள்ளார்.

இந்த மொடலிங் பெண்கள் வீட்டை விட்டுப் போகக் கூடாதெனவும் தப்பிக்க முயன்றால் அவர்களின் நிர்வாணப்படங்களை இணையத்தளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டியதாக சீ.ஐ.டீ.யினர் கூறினர்.

இன்னும் 3 பெண்கள் தொடர்மாடி வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் சீ.ஐ.டீயினர் கூறினர்.

சந்தேக நபரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், அவரை பிணையில் விடுவிக்கும்படி கேட்ட போதிலும் நீதவான் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .