2025 மே 15, வியாழக்கிழமை

கம்பஹாவில் கோட்டா; தேசிய பட்டியலில் பசில்?

Kanagaraj   / 2015 ஜூலை 05 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. அவர், எந்த கட்சியில் போட்டியிடபோகின்றார் என்று தெரியவரவில்லை.

இதேவேளை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மீது சுமத்தப்பட்டுள்ள நிதிமோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக அவர், இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வருவார் என்றும் தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரமேஜயந்தவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .