2025 மே 15, வியாழக்கிழமை

முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு: சங்கரி

Kanagaraj   / 2015 ஜூலை 07 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் நீரோடைக்குள் புகமுனையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

'போராளிகளையும் போராட்டத்தையும் பிரசாரப் பொருளாக்கி தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்பொழுது முன்னாள் போராளிகளை ஒதுக்கி வைக்கப் பார்க்கிறது. யுத்தத்தின் கொடூரத்தினால் கை, கால் இழந்து தவிக்கும் முன்னாள் போராளிகள் இப்பொழுது நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் ஜனநாயக அரசியல் நீரோடைக்குள் புகமுனையும்போது சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தினை வழங்காமல் சம்பந்தன் துரோகமிழைத்துள்ளார்' என்று குறிப்பிட்ட சங்கரி,

'முன்னாள் போராளிகளுக்காக அரசியலில் ஒதுங்கியிருந்து களமமைத்துக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். நான் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானவனல்ல. தவறான சித்திரிப்பின் மூலமாக என்னை துரோகியாக்கினர். ஆனால், இன்று அவர்களே துரோகமிழைத்து வருகின்றனர் என்பதை முன்னாள் போராளிகளும் புரிந்திருப்பார்கள். எது எப்படியிருப்பினும், பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அரசியல் களத்துக்குள் வருவதனூடாகவே அவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெறமுடியும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்' என்றும் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .