Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 ஜூலை 07 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பில் உள்ளதால், ஐ.ம.சு.கூ.வின் கூடிய அதிகாரம் தற்போது மஹிந்தவுக்கு மாறியுள்ளதாகவும் அதனால், ஐ.ம.சு.கூ.விலிருந்து விலகி தனித்து போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யோசித்து வருவதாக சு.க.வின் அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினர் கை சின்னத்தில் தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளது என மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், தனித்து போட்டியிடும் தீர்மானமொன்றை சு.க இதுவரை எடுக்கவில்லை என்றும் ஐ.ம.சு.கூ.விலேயே சு.க போட்டியிடும் என்றே தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சு.க.வின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி, மாற்றத்துக்கு தயாரான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் தரப்பைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழும் மஹிந்த தரப்பைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழும் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலில் சு.க தனித்து போட்டியிடுமாயின், ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஐ.ம.சு.கூ.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இலகுவாக கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இதேவேளை, மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கியதால் ஐ.ம.சு.கூ.வை விட்டு விலகி, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட முடிவு செய்திருந்த சு.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீண்டும் சு.க.வின் கீழ் போட்டியிடும் வாய்ப்பு ஏற்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், சு.க.வில் உயர் பதவிகளை வகிக்கும் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் பதவிகள் குறித்து எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.ம.சு.கூ.விலிருந்து சு.க பிரிந்து செல்லுமாயின் சட்ட நடைமுறைகளை காரணம்காட்டி ஐ.ம.சு.கூ.வுக்கு வேட்புமனு வழங்குவதை தடுத்து அவர்களை தேர்தலில் போட்டியிடச் செய்யவிடாமல் தடுக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அதனாலேயே மஹிந்த தரப்பு 'பிளான் பீ'யை தயாரித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு வழங்கியமையின் பின்னணியில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று செயற்பட்டதாகவும் இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபாலவின் தரப்பு ஏற்றுக்கொள்ளாவிடினும், மஹிந்த குழு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாலேயே மைத்திரி தரப்பு மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்க தீர்மானித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago