2025 மே 15, வியாழக்கிழமை

தங்க கடத்தல் பெண்ணுக்கு 8 மில்லியன் அபராதம்

Kanagaraj   / 2015 ஜூலை 07 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

100 தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற 31 வயதான,  வத்தளையை வசிப்பிடமாக பெண் கணக்காளருக்கு ரூபா 8 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லீ காமினி தெரிவித்துள்ளார்.

இவருக்கு உடந்தையாக இருந்த வெள்ளவத்தை நகைக்கடையொன்றின் உரிமையாளர் என்று கூறப்படும் நபருக்கு ரூபா 4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தங்க பிஸ்கட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

விசாரணையின் போது மேற்படி பெண் முன்பு நான்கு தடவைகள் தங்க பிஸ்கட்களை கொண்டு வந்ததாகவும், மேற்படி வெள்ளவத்தை நகைக்கடையின் ஊழியர்கள் இருவர் 9 கிலோகிராம் தங்கத்தை கடத்தியபோது இந்திய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தாகவும் கூறியுள்ளார்.

மேற்படி பெண் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தார். இவரை சோதனைசெய்தபோது ஐந்து உள்ளாடைகளுக்குள் 10 கிலோகிராம் தங்க பிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .