Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 07 , பி.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கெலும் பண்டார
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்புமனுப் பட்டியல் இறுதிசெய்யப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
ஜனாதிபதி சிறிசேனவுக்கு விசுவானமான ஒரு பிரிவு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விசுவாசமான பிரிவு எனக் காணப்படும் ஐ.ம.சு.கூ. இன் இரண்டு பிரிவுகள், தெரிவுசெய்யப்படும் வேட்பாளர்களின் நடத்தை தொடர்பாகக் காணப்படக்கூடிய வேற்றுமைகளைத் தீர்ப்பதற்காக நேற்றைய தினம் விரிவான கலந்துரையாடல்களின் ஈடுபட்டிருந்தன.
குறிப்பிட்ட சில நபர்களுக்கு வேட்புமனுக்களை வழங்காமலிருப்பதற்கு இரண்டு தரப்பிலும் இம்முறை கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக, ஐ.ம.சு.கூ. முக்கியஸ்தர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.
ஐ.ம.சு.கூ. சார்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாகப் போட்டியிடுவார் என உறுதிப்படுத்திய முன்னாள் எம்.பி. குமார வெல்கம, இயலுமானால் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஐ.ம.சு.கூ. எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago