2025 மே 15, வியாழக்கிழமை

நீதியரசர் சரத் ஆப்றூ சரணடைந்தார்

Kanagaraj   / 2015 ஜூலை 07 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூ, கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் சரணடைந்துள்ளார். சட்டத்தரணிகள் சகிதமே சரணடைந்துள்ளனர்.

தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பணிப்பெண் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரை கைதுசெய்யமுடியும் என்று இரகசிய பொலிஸ் விசாரணை அறிக்கையை பொலிஸார், சட்டமா அதிபரிடம் நேற்று திங்கட்கிழமை கையளித்துள்ளனர்.

இதனையடுத்தே சட்டமா அதிபர், இரகசிய பொலிஸாருக்கு மேற்கண்டவாறு பணித்துள்ளார் என்று தெரியவருகின்றது. 
இதேவேளை, தனக்கு எதிரான முறைப்பாட்டை விசாரணை செய்யும் முறைமை சட்டத்துக்கு முரணானது என்று கூறியும் அந்த விசாரணை அடிப்படை உரிமையை மீறுவதாகவும் கோரி நீதியரசர் சரத் ஆப்றூவின் அடிப்படை உரிமையே மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிமல் முத்துகுமாரனவினால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .