Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 08 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுமதிப்பத்திரங்கள் கிடைத்தவுடன் அவற்றை பரீட்சார்த்திகளுக்கு விநியோகிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகளின் நலன் கருதி உயர்தரப் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் புதிதாக மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாகவும் இதற்கமைய பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடப் பிரிவு மற்றும் பரீட்சை நிலைய இலக்கம் என்பன அனுமதிப் பத்திரத்தில் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையும் ஆகஸ்ட் 24ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 08ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து 69 பேர் தோற்றவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago