Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 ஜூலை 07 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகளும் நபர்களும் இணைந்து முக்கூட்டை அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குதிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இந்த புதிய கூட்டு போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பு மனு வழங்காமல் விடப்பட்ட உறுப்பினரையும் இணைந்துகொண்டே இந்த முக்கூட்டை அமைக்கப்படவுள்ளதாகக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்திருந்தும் வேட்பு மனு கிடைக்காத வடமாகாண சபையை சேர்ந்த ஒருவருடனேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் தெரியவருகின்றது.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவிருக்கின்ற வேட்பாளர்களின் விவரங்களை கூட்டமைப்பு வெளியிடாத நிலையிலேயே இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சுதாகரன் Wednesday, 08 July 2015 01:01 PM
தமிழ் தேசிய கூட்ட மைப்பினர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் நாங்கள் தான் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றி பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை தம்வசம் வைத்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஜனநாயக போராளிகள் கட்சியினர் இவர்களுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் தமது பதவிகள் பறிபோய்விடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இவர்களுக்கு வேட்பு மனு வழங்க மறுத்துள்ளனர். ஜனநாயக போராளிகள் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தழிழ் மக்களை ஏமாற்றி கொழும்பிலும் வெளி நாடுகளிலும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். எனவே ஜனநாயக போராளிகள் இம்முறை தேர்தலில் போட்டி இட்டு வெற்றி வாகை சூடி இந்த தமிழ் தேசிய கூட்ட மைப்பு பொய், ஏமாற்று பாராளுமன்ற உறுப்பினர்க ளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
Reply : 0 0
aaRumukam Thursday, 09 July 2015 09:15 AM
இன்று தமிழரின் ஈழத்தில் மிகச்சிக்கலான காலம் ஓட்டுகளை பிரித்து தமிழரை மேய்வதற்கு எதிரணி திட்டமிடுகிறது. அவர்கள் 1000 ஆண்டுகளா முன்னெடுக்கும் ஒரு தந்திரம் பிரித்து ஆளுவது. புரிஞ்சால் ஐ நா அறிக்கை வரும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago