2025 மே 14, புதன்கிழமை

'உரிய நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவும்'

George   / 2015 ஜூலை 11 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை, நாளை மறுதினம் திங்கட்கிழமை(13) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நண்பகல் 12.00 மணியுடன் நிறுத்தப்படும்.

இறுதி நேரத்தில் வருகைதந்து நெருக்கடியை ஏற்படுத்தாமல், வேட்பு மனுக்களை தாக்கல் செய்வோர் உரிய நேரத்துக்கு வந்து தமது வேட்பு மனுக்களை கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .