Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஜூலை 13 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த காலங்களில் அரசியலில் ஏற்பட்டுள்ள பல்வேறு சம்பவங்களை கருத்திற்கொண்டு, தான் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
தேசிய பட்டியலில் தனக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையொன்று கிடைத்தாலும் தான் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் நிர்மல கொத்தலாவல மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், தேசியப் பட்டியலில் தனக்கு இடம் கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், அரசியலிலிருந்து ஓய்வுபெறப்போவதா இல்லையா என்பது தொடர்பில், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னரே தான் தீர்மானிக்கப்போவதான ஊவா முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்தால், தான் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக ஹிரின் பெர்ணான்டோ, ஏற்கெனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago