2025 மே 15, வியாழக்கிழமை

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்துக்கான தடை நீடிப்பு

Gavitha   / 2015 ஜூலை 13 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதற்கான தடை, செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று இந்த தடையுடத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்தனர்.

எனினும் இத்திட்டம் பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால், பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய அத்திட்டத்தை அமுல்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .