2025 மே 15, வியாழக்கிழமை

ஷிராணியின் மகனும் போட்டி

Kanagaraj   / 2015 ஜூலை 14 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் மகன் ஷவின் பண்டாரநாயக்க காரியவசமும் இம்முறை தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்.

எமக்கு அரசியல் தேவையில்லை, பொது மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு, 'உங்களுக்கும் எனக்கும் நடைமுறையிலுள்ள தேர்தல் முறையைவிட மாற்றியமைக்கப்பட்ட அரசியல் கலாசாரம்  வேண்டும். திறமையான, சுத்தமான  மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். இதனை உங்களுக்கோ அல்லது எமக்காகவோ செய்யமுடியாது போனாலும் எதிர்கால சந்ததியினருக்கு  கிடைக்கபெறவேண்டும்.

நாம் மேற்கொண்டுள்ள பயணம் நீண்டதும் கடினமானதுமாகும். அது எங்கேயோ ஆரம்பமாகி உள்ளது. எங்களுக்கு அவசியமானது அரசியல் அல்ல, பொதுமக்களின் சேவையே' என அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .